இலங்கை விமானவியல் தொல்பொருளியல் துறையின் நிர்மாணிப்பாளர்
விமான கேப்டன் ஹர்ஷ கோவிந்த கோரள ஆராச்சி விஞ்ஞானமானி (பாதுகாப்புப் பல்கலைக்கழகம்)
ஆய்வாளர்
விமான தொல்பொருளியல் துறை ஆச்சரியம் மிக்க உண்மைகள் நிறைந்த துறையாகும். விமான தொழில்நுட்பம், போக்குவரத்து, உல்லாசப்பயண நடவடிக்கை மற்றும் நாட்டின் கலாச்சாரத்தை வரம்பற்ற ரீதியாக போசிக்கும் திறமை அதற்குண்டு.
விமான தொல்பொருளியல் துறையின் வளர்ச்சியுடன் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வசதிகளும் அதிகரிக்கும். இரகசியங்கள், புராண கால யுக்திகள், அனுபவசாட்சிகள் இவ் விடய துறையில் அதிகமாகக் காணக் கூடியதாக உள்ளது. இறந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் ஒன்றாக இணைக்கும் மிகவும் அழகான பின்னல் இதன் மூலம் உருவாக்கப்படுகின்றது. அவ்வலைப்பின்னலானது எதிர்காலத்தையும் நோக்கி பயணிக்கின்றது. விமானிக்கும், சாகசகாரர்களுக்கும், சுதந்திர எண்ணம் கொண்டவர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும், இத் துறையில் மிகவும் சிறந்த ஊக்குவிப்பை ஏற்படுத்துவதாக விமான தொல்பொருளியல் துறையில் ஆர்வமுடையவர்களும் அத்துறையில் பணிபுரிபவர்களும் கூறுகின்றனர். வானமே அதன் எல்லையாக அமைந்துள்ளது. விமான தொல் பொருளியல் துறைத் தொடர்பாக எதிர்பார்ப்பை ஏற்படுத்திக் கொள்ளவும் அவ்விடயத்துறையை அநுபவிக்கும் சந்தர்ப்பமும் உங்களுக்கு கிடைத்துள்ளது.
இவ் வலைப்பதிவை (புளொக்) தாயாரித்து அதனை நான் செயல்படுத்துவது எனது முதுகலைப் பட்டப் படிப்பு ஆய்வுகளை மேற்கொள்ளவும், தெற்கு ஆசியாவில் விமான தொல்பொருளியல் தொடர்பான தரவுகளை சேகரிக்கவுமாகும்.
DOWNLOAD RESEARCH QUESTIONER
SINHALA
TAMIL
ENGLISH