இலங்கையில் விமானத் தொழில்நுட்பம் மிகவும் இணையற்ற திட்டமாகும்.
இராவணா விமானத் துறை கல்வி நிலையம் 2012ம் ஆண்டு இறுதியில் அந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டே ஆரம்பிக்கப்பட்டது. தொனிப்பொருளில் குறிப்பிடப்படும் வகையில் விமான தொழில்நுட்பம் தொடர்பான தொழில் கல்வியைப் பெற்றுக் கொடுக்கும் கல்வி நிறுவனமாக மாற்றுவதே எனது நோக்கமாகும். www.ravanaaviation.com
இராவணனா விமான தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் சமூக உறுதிப்பாடு தேசிய பொறுப்புத் திட்டம்.
யாழ்ப்பாணம் மத்திய மகா வித்தியாலயத்தில் பாடசாலை விமான தொழில்நுட்பக் கழகம் ஒன்றை நிறுவி விமான கேப்டன் ஹர்ஷ கோவிந்த கோரளே ஆராச்சி தனது சமூகப் பணியை விரிவாக்கினார். அவர் நிறுவிய விமான தொழில்நுட்ப பாடசாலைக் கழகம் வடக்கு மாகாணத்தில் நிறுவப்பட்ட முதலாவது விமான தொழில்நுட்ப பாடசாலைக் கழகமாகும். விமான தொழில்நுட்பம் தொடர்பாக விரிவுரைகளை ஆற்றுவதன் மூலம் கிராமிய பாடசாலை மாணவர்களை அறிவுறுத்தும் நடவடிக்கையை ஆரம்பித்தார். மாதமொன்றுக்கு 12 விராவுரைகளை ஆற்றும் திட்டத்தை செயல்படுத்தினார். விரிவுரைகளில் வெற்றிகரமாக பங்கு கொள்ளும் மாணவர்களுக்கு இராவணா விமான கல்வி நிறுவனத்தால் நடத்தப்படும் பரீட்சைகளுக்குத் தோற்றி அதில் சித்தி பெறுபவர்களுக்கு சான்றிதழ்களைப் பெறும் சந்தர்ப்பம் உள்ளது. அவ்வாறு பெற்றுக் கொள்ளும் சான்றிதழும் உயர் தர பரீட்சையின் Z புள்ளியும் வெளிநாட்டுப் புலமைப் பரிசிலுக்கு விண்ணப்பிக்கும் போது உதவியாக இருக்கும் என விமான கேப்டன் ஹர்ஷ கோவிந்த கோரளே ஆராச்சி குறிப்பிட்டார். இத் திட்டத்தை நாடுபூராவும் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப் படுகின்றது.
இந்திய விமான தொழில்நுட்ப மாணவர்களுக்கும் புலமைப் பரிசில் வழங்கும் திட்டமொன்றையும் ஆரம்பிக்க விமான கேப்டன் ஹர்ஷ கோவிந்த கோரளேஆராச்சி தனது பூரண பங்களிப்பை வழங்கி உள்ளார். அதற்கு யாழ்ப்பாண இந்திய கொன்சோல் ஜெனரலின் பங்களிப்பும் கிடைத்துள்ளது.
விமான தொழில்நுட்பம் தொடர்பான பட்டம் விடும் விமான களியாட்டம்.
விமான கேப்டன் ஹர்ஷ கோவிந்த கோரளே ஆராச்சியின் வழிகாட்டல் மற்றும் ஏற்பாட்டில் “பட்டம் மூலம் வான்வெளிக்கு” (Kite to Aviation) என்னும் தொனிப்பொருளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகின்றது. பிள்ளைகளின் விமான தொழில்நுட்ப திறனை விருத்தி செய்யவும் அது தொடர்பாக கனவு காணவும் வழி வகுக்கும். இதன் மூலம் அவர்களின் திறமைக்கேற்ப பட்டங்களை உருவாக்க இடமளிக்கப்படுகின்றது. அதன் மூலம் அவர்களின் நிர்மாணத் திறமை ஊக்குவிக்கப்படுகின்றது .உலகிற்கு புதிய பட்டங்களின் வடிவங்களையும் அறிமுகம் செய்ய வழியேற்படுகின்றது. வான்வெளியில் தொடர்பாடலை ஏற்படுத்தி அதனுடன் இணைந்து செயல்பட மாணவர்களை பழக்கப்படுத்துவதே இதன் மூலம் நடைபெறுகின்றதென விமான கேப்டன் கூறுகின்றார். அது தொடர்பாக www.rakasl.com (Ravana Aviation Kite Association of Sri Lanka) என்னும் இணைய தளம் மூலம் விபரங்களை அறிந்து கொள்ளலாம்.
2014 – பகல் நேர பட்டம் விடும் விழா நடைபெற்றது.
2016 – இரவு மற்றும் பகல் பட்டம் விடும் விழா யாழ்ப்பாணத்தில்ந டைபெற்றது.
இரவு நேர பட்டம் விடும் விழா
2017 – வெசாக் ஒளியூட்டும் இராவணா விமான தொழில்நுட்ப
பட்டம் விடும் போட்டி 2017ம் ஆண்டு வெசாக் போயா தினத்தில் நடைபெற்றதது.
இலங்கையின் உணவு பாதுகாப்பு தொடர்பான ஆய்வில் விமான கேப்டன் ஹர்ஷ கோவிந்த கோரளேஆராச்சி ஈடுபட்டார். அது தொடர்பான அறிக்கையை அத்துறை சார்ந்த அதிகாரிகளிடம் கையளித்தார். அத்தியாவசிய உணவுப் பயிர்ச்செய்கை, களஞ்சியப்படுத்துகையில் பின்பற்ற வேண்டிய அநேக வழிமுறைகள் பற்றி ஆய்வில் பரிந்துரை செய்துள்ளார். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் குறைந்த விலையில் அத்தியாவசிய உணவு வகைகளை பாவனையாளர்களுக்கு பெற்றுக் கொடுப்பது என்பது தொடர்பாக அவரது அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதேபோல் உணவு பொருட்கள் தொடர்பாக கட்டுப்பாட்டு விலையை நடைமுறைப்படுத்தவும் அப் பரிந்துரைகள் முக்கியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விமான கேப்டன் ஹர்ஷ கோவிந்த கோரளே ஆராச்சி தனது அதிக நேரத்தை இதற்காகவே செலவிட்டுள்ளார். அதேபோல் விமான தொழில்நுடபத் துறைத் தொடர்பாக எதிர்கால சந்ததியினரை அறிவுறுத்தும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார். இது வரை அவரிடமுள்ள அறிவுசார்ந்த சொத்துக்களின் எண்ணிக்கை ஓன்பதாகும். அவரின் இறுதி நோக்கம் இலங்கையின் தனித்துவத்தை உலகறியச் செய்வதாகும்.