இலங்கையின் விமானவியல் தொல்பொருளியல்
விமானவியல் தொல்பொருளியல் இலங்கையில் நிறுவுவதற்காக மேற்கொள்ளப்படும் ஆய்வுகளை பதிவிடுவதற்கு இந்த வலைப்பதிவு(புளோக்) குறிப்பு நிர்மாணிக்கப்பட்டுள்ளது

சின்னம்

இடது புறமுள்ள சிகப்பு நிறம் “A” எழுத்தில் அடையாளப் படுத்தப்படுவது – விமானத் துறையாகும்.

வலது புறமுள்ள சிகப்பு நிறம் அடையாளப் படுத்துவது – விமான தொல்லியலாகும்.

சிலந்தி – ஆதிகால மனிதன் வானில் மேற்கொண்ட செயல்பாடுகளில் எவ்வித எச்சங்களும் சிறிதளவு கூட எம்மிடம் இல்லை. வானில் மேற்கொள்ளப்படும் அநேகமானவை விண்வெளியில் மறைந்துவிடுகின்றது. வான் தொடர்பாக அது யதார்த்தமானது. சிலந்தி வலையை பின்னுவது சிலந்தியாகும். சிலந்தி வலையில் சிக்கி இருப்பவற்றை ஆராய்வதன் மூலம் முன்னர் அந்த வாயு அலைகளைப் பற்றி அறிந்து கொள்ளளாம். அது எவ்வாறு என்றால் வலையில் சிக்கிய சில துணிக்கைகள் மூலமேயாகும். அதன்படி வளிமண்டலத்தின் வண்டல்களில் முதலிடம் வகிப்பது சிலந்தி எனக் கூறலாம்  அந்த அர்த்தத்தில் தான் அது சின்னமாக பாவிக்கப்படுகிறது.

சிலந்தி வலை – வாயு மண்டலத்தில் இறுதியாக  காணப்படும் வண்டலை சிலந்தி வலை அடையாளப் படுத்துகின்றது 

சிலந்தியின் கால்கள்- கடிகாரச் சுற்றில்

1வது கால்    –     வாய்வழி சம்பிரதாயங்கள்

2வது கால்    –     நடிகர்கள்

3வது கால்    –     வாய்வழி கதைகள்

4வது கால்    –     எழுத்துருவ மூலங்கள்

5வது கால்    –     எழுத்துருவ இலக்கியங்கள்

6வது கால்    –     பரம்பரையுடன் இணைந்த இலக்கியங்கள்

7வது கால்    –     விளக்கங்கள் (narratives)

8வது கால்    –     எழுத்துக்கள், கலை, வேலைப்பாடுகள் மற்றும்

பலவிதமான அடையாளங்களும்.

கொம்புச் சோடிகள்– சிலந்தி தனது கொம்புகளைப் பாவிப்பது பறந்து செல்லும் பூச்சிகளை பிடிப்பதற்கும் மற்றும் தன்னைச் சுற்றியுள்ள தேவையற்றவைகளை அகற்றவுமேயாகும். சிலந்தியின் கொம்புகள் மூலம் இங்கு அடையாளப் படுத்துவது தகவல்களை சேகரிப்பது, அதன் மூலம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விமானத் துறைப் பற்றி அறிந்து கொள்ளல் மற்றும் நுண் தொல்பொருளியல் முறைகளைப் பயன்படுத்தி அந்த துறையில் உள்ள வண்டல்களையோ சேமிப்புகளையோ ஆராய்வது தொடர்பான விடயமாகும்.

சிகப்பு நிறம் – விமான தொழில்நுட்பம் மற்றும் அது தொடர்பான வரலாற்று தொழில்நுட்ப முறைகளை ஆராய்வதில் உள்ள தீவிர ஈடுபாடு.

நீலநிறம் – வான்துறை எப்போதும் விண்வெளயோடு சம்பந்தப்பட்டது. நீல நிறத்தால் அடையாளப்படுத்தப்படுவது புவியின் வாயு மண்டலம் ஆகும்.

கறுப்பு நிறம் – புராதான விமான தொழில்நுட்பத்துடன் பல இரகசியங்கள் புதைந்துள்ள. அந்த இரகசியங்களை அடையாளப்படுத்துவதே கறுப்பு நிறமாகும்.