இலங்கையின் விமானவியல் தொல்பொருளியல்
விமானவியல் தொல்பொருளியல் இலங்கையில் நிறுவுவதற்காக மேற்கொள்ளப்படும் ஆய்வுகளை பதிவிடுவதற்கு இந்த வலைப்பதிவு(புளோக்) குறிப்பு நிர்மாணிக்கப்பட்டுள்ளது

ஆய்வின் பின்னணி

ஆதிகால வான்வழிப் பயணம் தொடர்பான மற்றும் அது தொடர்பாகக் காணப்படும் துறைகள் பற்றிய வாய் வழியாக வரும் பரம்பரைக் கதைகளும் வாய்வழி அல்லாத சாம்பிரதாயங்களும் பெருமளவு உள்ளன. புராதான இலங்கையின் வான்வழிப் பயணம் பற்றி வால்மீகியின் இராமாயணத்தில் தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. புராதன விமான தொழில்நுட்பம் இந்தியாவின் எல்லோரா குகை ஓவியங்களில் காணப்படுகிறது. அதைத் தவிர இன்னுமொரு முக்கிய நூலாக “விமான சாஸ்திரம் ” நூலைக் குறிப்பிடலாம். அதில் விமானமோட்டும் தொழில்நுட்பங்கள் தொடர்பான பல தகவல்கள் அடங்கியுள்ளன.

இந்த சூழ்நிலையில் பல முக்கிய பிரச்சனைகள் தோன்றுகின்றன.

 • புராதன விமான தொழில்நுட்பம் தொடர்பான எழுத்துருவிலோ அல்லது எழுத்துருவில்லாமலோ இவ்வாறான காரணிகள் ஏன் காணப்படுகின்றன?
 • முதலில் எடுத்தியம்பிய தகவல்கள் எவ்வாறு மனித கலாச்சாரத்துடன் தொடர்புப்படுகின்றது?
 • வாய்வழி அல்லது வாய்வழி அல்லாத சம்பிரதாயங்களுக்கும் புராதன விமான தொழில்நுட்பம் தொடர்பான துறைக்கும் இடையேயான உறவை எவ்வாறு உருவாக்குவது?
 • கர்ணபரம்பரைக் கதைகளில் கூறப்படும் தகவல்கள் உண்மையானவையா?
 • விமான தொழில்நுட்பம் புராதன காலத்தில் காணப்படுவதற்கான சாத்தியம் இருந்தா? இல்லையா?

வாய்வழி அல்லது வாய்வழி அல்லாத சம்பிரதாயங்களாக சமூகத்தில் நிலவும் அனுபவ மற்றும் அனுபவமற்ற சாட்சிகளை அடிப்படையாக் கொண்டு முன்னெடுத்துச் செல்லக்கூடிய வகையில் ஆய்வானது திட்டமிடப்பட்டுள்ளது. தென்கிழக்காசிய விமான தொல்பொருளியல் துறை தொடர்பாகப் பெற்றுக் கொள்ளப்படும் தகவல்களை ஆராய்ந்து மேற்குறிப்பிடப்பட்ட கேள்விகளுக்கு விடை காண தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆராய்ச்சி கருதுகோள் – 

தேசிய ரீதியாகவும சர்வதேச ரீதியாகவும் காணப்படும் சம்பிரதாய வாய்வழி அல்லது வாய்வழி அல்லாத பரிசீலனை அல்லது புராதன இலக்கியத்தில் குறிப்பிடப்படும் புராதன விமான நடவடிக்கைகள் மற்றும் அது தொடர்பான தொழில்நுட்பமும், தென்கிழக்காசிய புராதன விமான தொழில்நுட்பத்துடன் அந்யோனிய தொடர்புடையதாகும்.

நோக்கம் –

தென் கிழக்காசியாவில் வரலாற்று துறையில் உள்ள விமான தொழில்நுட்பம் தொடர்பாக வாய்வழி அல்லது வாய்வழி அல்லாத சம்பிரதாயங்களை சேகரிப்பது மற்றும் ஆராய்வதுமாகும்.

ஆராய்ச்சி சூழல் – 

தென் கிழக்காசியாவில் விமான தொழில்நுட்பம் தொடர்பான பண்டைய துறைகளில் காணப்படும் வாய்வழி அல்லது வாய்வழி அல்லாத சம்பிரதாயம் தொடர்பான புரிந்துணர்வைப் பெற்றுக் கொள்ளல்.

தரவுகள் சேகரிப்பு – 

 • புத்தகங்கள் வாயிலாக

 

புராதன ஓலைச்சுவடிகள் தொடக்கம் நவீன அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் குறிப்பிடப்படும் ஆய்வுரீதியான தகவல்கள். அதாவது;

 • எழுத்துருவ குறிப்புகள், நூல் நிலையங்கள் மற்றும் கல்லூரிகள்.
 • விவாதத்திற்குரிய உரைகள்.
 • விவாதத்துக்குரிய விவரணங்கள்.
 • மொழிபெயர்ப்புகள்.
 • டிஜிட்டல் தொழில்நுட்பம், வான்வழிப் புகைப்படங்கள் மற்றும் பகுப்பாய்வு.
 • வரலாற்று ரீதியான கலைப் படைப்புகளை ஆராய்தல்.

பயணங்கள் மூலம் பரிசீலனை –

விமான தொழில்நுட்பம் தொடர்பான கர்ணபரம்பரைகளில் குறிப்பிடப்பட்டுள்ள துறைகளை ஆராய்தல் மற்றும் வாய்வழி மற்றும் வாய்வழி அல்லாத சம்பிரதாயங்களில் காணப்படுகின்றன பௌதிக சாட்சிகளை பரிசீலனை செய்தல்.

நேர்காணல் –

மாறுபட்ட நபர்களுடன் நேர்காணல்களை நடத்தல்.

 

 • இலங்கையின் புராதன விமான தொழில்நுட்பம் மற்றும் அதனுடன் இணைந்த பிரதேசங்களில் வசிக்கும் பிக்குகளுடன் கலந்துரையாடல். அதைத் தவிர அவ்வாறான இடங்களில் வசிக்கும் பாடசாலை அதிபர்கள், கிராமசேவகர்கள் மற்றும் மூத்த குடிமக்களிடம் கலந்துரையாடி தரவுகளைப் பெற்றுக்கொள்ளல்.

குறிப்பு – விசேடமாக தாயாரிக்கப்பட்ட கேள்விக்கொத்து இதற்காகப் பயன்படுத்தப்படும்.

 • இந்த ஆய்வு தொடர்பான உலகம் முழுவதும் காணப்படும் தரவுகளை பெற்றுக்கொள்ள இணையதளம்/வலைப்பதிவை (புளோக்) நிர்மாணம்  செய்தல். (விமான தொழில்நுட்பம் தொடர்பான புராதன துறையில் வாய்வழி மற்றும் வாய்வழி அல்லாத தேசிய  மற்றும் சர்வதேச ரீதியில் காணப்படும் தகவல்கள், சாதாரண மக்களின் மற்றும் தொழிலாளர்களின் கருத்துக்கள், விமர்சனங்கள் மற்றும் எண்ணங்கள்).
 • இந்த வலைப்பதிவை(புளோக்)செயல்டுத்துவது எனது முதுகலைப் பட்டப் படிப்பு ஆய்வுக்கு  ஆசியாவின் விமான தொழில்நுட்பம் தொடர்பான தகவல்களைப் பெற்றுக் கொள்ளவாகும்.