நோக்கம் –
இலங்கையின் தனித்தன்மையை உலகிற்கு எடுத்தியம்பல்.
சாதாரணக் கல்வி –
ரோயல் கல்லூரி – கொழும்பு
விமானப் படை கேப்டன் ஹர்ஷ கோவிந்த கோரளேஆராச்சி கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவர். அவர் உயர் நிலை மற்றும் இரண்டாம் நிலை கல்வியை ரோயல் கல்லூரியில் நிறைவு செய்தார். இராணுவக் கல்வியைத் தொடர கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் இணைந்து கொண்டார். சிறீமத் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு விஞ்ஞானமானி பட்டத்தைப் பெற்றார்.
விமான தொழில்நுட்பம் தொடர்பான கல்வி பயிற்சி மற்றும் அனுபவங்கள்.
இலங்கை விமானப்படை
விமானப் படை கேப்டன் ஹர்ஷ கோவிந்த கோரளே ஆராய்ச்சி விமானியாக தனது தொழிலை 2000 ஆம் வருடத்திலேயே ஆரம்பித்தார். ஹெலிகொப்டர் விமானியாக தனது தொழிலை இலங்கை விமானப்படை ஹிங்குராங்கொடை ஹெலிகாப்டர் பயிற்சி தளத்தில் ஆரம்பித்தார். அன்று தொடக்கம் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை விமானப்படையில் பணி புரிந்தார். சவாலான பல முடிவுகளை எடுக்க வேண்டிய சூழலில் இராணு நடவடிக்கைகள் பலவற்றில் பங்கு பற்றி தனது விமானமோட்டும் திறமையை வளர்த்துக் கொண்டார்.
தொல்பொருளியல் கல்வி
தொல்பொருள் முதுகலை கல்வி நிறுவனம், களனிப் பல்கலைக்கழகம்
களனிப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த தொல்பொருளியல் முதுகலை கல்வி நிறுவனத்தில் தொல்பொருளியல் டிப்ளோமாவை 2015ம் ஆண்டில் பெற்றுக் கொண்டார். “இலங்கையில் வரலாற்றுக்கு முந்திய விமான தொழில்நுட்பம் தொடர்பான கர்ணபரம்பரை மற்றும் தொல்பொருளியல் துறை” என்னும் தலைப்பின் கீழ் தனது ஆய்வு நடவடிக்கைகளை அங்கு ஆரம்பித்தார்.
தனது முதுகலை மற்றும் கலாநிதி பட்டப்படிப்பகளுக்கான கல்வி நடவடிக்கைகளுக்காக தெரிவு செய்ததும் தொல்பொருளியல் முதுகலைப் பட்ட கல்வி நிறுவனதையேயாகும். முதுகலை மற்றும் கலாநிதி பட்டப்படிப்புகளுக்காக தொல்பொருளியலை தெரிவு செய்ததன் மூலம் அவரின் இலக்காக இருந்தது விமான தொல்பொருளியல் விடய துறையை இலங்கையில் உருவாக்குவதேயாகும்.
அவர் தொழில் இலங்கை சிவில் விமான சேவை அதிகார சபையின் (CAA SL) விமானிகளுக்கான ஆலோசகராவார் (GROUND INSTRUCTOR PILOT FOR AIRLINE TRANSPORT PILOT IN HELICOPTER & AEROPLANE).
விமான கேப்டன் ஹர்ஷ கோவிந்த கோரளே ஆராய்ச்சி 2008ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகாரசபையின் Helicopter stream Airline Transport pilot licensing பரீட்சையில் சித்தி அடைந்தார். அதில் சித்தி அடைந்த முதலாவது விமானி அவராவார்.
விமானி ஒருவரால் பெற்றுக் கொள்ளக் கூடிய உலகின் உயர்ந்த தகுதிகளை அவர் பெற்றுள்ளார்.
அவர் 2010ல் Civil Aviation Authority of United Kingdom Air Line Transport Licensing பரீட்சையில் சித்தி பெற்றுள்ளார். Ground Instructor licens for lecture the Airline Pilot license Ground Instructor License CAA SL Aero No -34, Airline pilot license Ground Instructor License CAA SL Helicopter No-42, Commercial Pilot Aero flying Crew License CAA SL No-717 ஆகிய தகுதிகளை பூர்த்தி செய்து தனது உத்தியோக வாழ்க்கையை மேம்படுத்திக் கொண்டுள்ளார்.
ஐரோப்பிய விமான தொழில்நுட்பப் பாதுகாப்பு ஏஜென்சி (EASA)
இறுதியாக ஐரோப்பிய விமான தொழில்நுட்ப பாதுகாப்பு ஏஜென்சியில் கீழ் கண்ட தகுதிகளில் அவர் சித்தி பெற்றார்.
Airline pilot License (ATPL) Theoretical Instructor European Aviation Safety Agency (EASA) to convert National Flight Crew License (NFCL) to European Safety Agency Airline Transport Pilot License (EASA ATPL) in Aeroplane Stream.