இலங்கையின் விமானவியல் தொல்பொருளியல்
விமானவியல் தொல்பொருளியல் இலங்கையில் நிறுவுவதற்காக மேற்கொள்ளப்படும் ஆய்வுகளை பதிவிடுவதற்கு இந்த வலைப்பதிவு(புளோக்) குறிப்பு நிர்மாணிக்கப்பட்டுள்ளது

அறிமுகம்

விமான தொல்பொருளியல் பல கருத்துபேதங்களுக்கு உள்ளான விடயத்துறையாகும். அதன் ஆணிவேர் இரண்டாம் உலகப்போர் சமயம் வரை நீண்டது. இவ்விடயம் இரண்டாம் உலகப்போர் சமயத்தில் சுட்டு வீழ்த்தப்பட்ட விமான பாகங்களைத் தேடி பிரித்தானிய மற்றும் அமெரிக்கப் படைகள் அகழ்வாய்வு மேற்கொண்ட போதே ஆரம்பமானது எனலாம்.

வரலாற்று மதிப்பு மிக்க துறையினை ஆய்வு செய்தல், அகழ்தல் அத்துடன் அப்பிரதேசங்கள் தொடர்பான தரவுகளை சேகரித்தல் என்பனவே தொல்பொருளியலுடன் தொடர்புபட்ட விடயங்கள் ஆகும்.

தொல்பொருளியல் தொடர்பான விடயபரப்பு ஆய்வுகளுடன் இணைந்த ஒன்றாகும்.
பல வருடங்களாக உலகம் பூராவும் ஆக்கப்பட்ட மக்கள் இலக்கியங்களில் ஆதிகால விமான போக்குவரத்து நடவடிக்கைகள் தொடர்பான தகவல்கள் அடங்கியுள்ளன. அதனால் விமான தொல் பொருளியலை பல கோணங்களில் ஆராய வேண்டும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

உலகம் முழுவதும் வாழ்ந்த பல கலாச்சார மக்கள் எதிர்கால தொழில்நுட்பத்தை அவர்கள் கண்ட கேட்ட தொழில்நுட்பத்துக்கு இணைந்ததாகவா அல்லது கற்பனை மூலமோதான் மனதில் உருவாக்கினார்கள். எனவே இந்த அடிப்படைக் கோட்பாடுகள் மனிதனின் எண்ணங்களை பலப்படுத்தவும் மனிதனின் ஆக்கத்திறனை மேம்படுத்தவும் உபயோகிக்க முடியும்.

புராதன காலம் தொட்டு இலங்கையில் வளர்ச்சி அடைந்த விமான தொழில்நுட்பம் காணப்பட்டதாக கூறப்படும் கர்ணபரம்பரை கதைகள் இலங்கை
நாட்டுப்புற இலக்கியங்களில் காணப்படுகின்றன. இராவணன் சீதையை புஷ்பக விமானத்தில் இலங்கைக்கு கவர்ந்து வந்ததாக இராமயணத்தில் குறிப்பிடப்படுகிறது.

“புஷ்பக விமானம்” பெரிய அளவிலான மயில் வடிவ இயந்திர வாகனமாகும். புஷ்பக விமானத்தில் உலகம் பூராவும் பறந்து சென்ற முதலாவது அரசனாக குறிப்பிடப்படும் அரசன் இராவணன் ஆகும். புஷ்பக விமானம் என குறிப்பிடப்படும் விமானம் குறித்த தகவல்கள் கல்வெட்டுகள், இலக்கியங்கள், மற்றும் ஓலைச்சுவடிகளில் காணப்படுகின்றன.                        புஷ்பக விமானத்தை இயக்க இராவணன் பாதரசத்தைப் பாவித்ததாக நம்பப்படுகிறது.

புஷ்பக விமானம் பற்றிய ஒரு உருவாக்கத்தை பரம்பரையாகக் கொண்டு வந்தது புராதன இலக்கியங்கலாகும்.

நான் இந்த வலைப்பதிவை (புளோக்) எனது முதுகலைப் பட்டப் படிப்புக்குத் தேவையான தெற்காசிய புராதன விமான தொழில்நுட்பம் தொடர்பான தகவல்களை பெற்றுக் கொள்ளும் நோக்கில் தயாரித்து உள்ளேன்.